மழையில் முளைத்த காளான் சாப்பிட்டதால் வந்த வினை - 5 பேர் மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் கோ-ஆப் டெக்ஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் தனது வீட்டின் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் முளைத்த காளான்களை பறித்துச் சமைத்து குடும்பத்தினருடன் சாப்பிட்டுள்ளார். 

இந்தக் காளானை சாப்பிட்ட சில மணி நேரத்தில் ஐந்து பேருக்கும் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் மயக்கம் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மழையில் முளைத்த காளான் சாப்பிட்டதால் ஐந்து பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது அப்பகுதியிலோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples admitted hospital for eat mushroom


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->