போலீஸ் போல் நடித்து 3 லட்சம் பணப்பறிப்பு - மதுரையில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் கரட்டுகாடு பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணி என்பவரிடம், மதுரை மாவட்டம் சொக்கிக்குளத்தை சேர்ந்த முத்துகுமார் என்பவர் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக தெரிவித்துள்ளார். இதை உண்மை என்று நம்பிய சிவசுப்ரமணி காரில் 3 லட்சம் பணத்துடன் மதுரைக்கு வந்துள்ளார். 

அதன் படி அவரை மாநகராட்சி நீச்சல்குளம் பகுதிக்கு அழைத்துச்சென்ற முத்துக்குமார் காரில் இருந்தவாறு பண விபரங்களை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அந்த இடத்திற்கு வந்த இரண்டு பேர், தங்களை போலீஸ் என்று அறிமுகப் படுத்திக்கொண்டு காரில் சோதனை செய்தனர்.

இதனால், பயந்தது போல நடித்த முத்துக்குமார், பணப்பையை வாங்கி கொண்டு அங்கு தயாராக நின்ற இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவசுப்ரமணி தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். 

அந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பணத்தை பறித்த முத்துக்குமார், அவரது கூட்டாளிகள் உள்பட ஐந்து பேரை கைது செய்து பணத்தையும் மீட்டனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples arrested for money fraud in madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->