அம்பானி வீட்டு விசேஷத்தில் கொள்ளை - சிசிடிவியில் சிக்கிய திருச்சி கும்பல்.! - Seithipunal
Seithipunal


மிகப்பெரிய தொழிலதிபரான அம்பானியின் இல்லத் திருமண விழா கடந்த இரண்டாம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே பங்கேற்றிருந்தது.

இந்த நிலையில், திருமண விழாவிற்கு வந்திருந்த ஒருவரின் மெர்சிடிஸ் கார் ஒன்றின் கண்ணாடியை உடைத்து, ரூபாய் 10 லட்சம் மற்றும் உள்ளே இருந்த லேப்டாப் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், நிகழ்ச்சியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி, ஜெகன், தீபக், குணசேகர், முரளி மற்றும் ஏகாம்பரம் ஆகிய ஐந்து பேரை டெல்லியில் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக ராஜ்கோட் காவல் கண்காணிப்பாளர் ராஜு பார்கவ் தெரிவித்ததாவது:- கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டம், ராம்ஜி நகரைச் சேர்ந்தவர்கள். தொழிலதிபர் அம்பானியின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் திருடலாம் என்ற நோக்கத்துடன் அவர்கள் திருச்சியில் இருந்து புறப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

அவர்கள் திருமண நிகழ்ச்சியில் திருடும் நோக்கில் ஜாம்நகருக்குச் சென்று பார்த்துள்ளனர். ஆனால் அங்கு பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக இருந்ததால், அங்கு திருடும் திட்டத்தை கைவிட்டுவிட்டு, ஜாம்நகர் பேருந்து நிலையத்திற்கு வந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த லேப்டாப்பை திருடியுள்ளனர். 

பின்னர், அங்கிருந்து ராஜ்கோட் சென்று, அங்கு நிறுத்தப்பட்டிருந்த மெர்சிடிஸ் கார் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த ரூ.10 லட்சம் பணம் மற்றும் லேப்டாப்பை திருடிவிட்டு, பின்பு டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்த கும்பல் ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் கேரளாவிலும் இதேபோன்று திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கொள்ளை கூட்டத்திற்கு முக்கியமானவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றோம்" என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples arrested for steal ambani son marriage function in gujarat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->