கள்ளக்காதல்: குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற கொடூர தாய்! போலீசார் விசாரணை!
Forgery The cruel mother who killed the child by throwing it in a well Police investigation
கள்ளக்காதலுக்கு வயது பெண் குழந்தை இடையூறாக இருப்பதாக கருதி, கிணற்றில் வீசி கொன்ற கொடூர தாய் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த உறவினரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள காந்திபுரத்தை சேர்ந்தவர் முத்தையா (24), இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி சினேகா (22). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணமாகி, பூவரசி(4) என்ற பெண் குழந்தை இருந்ததுள்ளது. இதன் இடையில், முத்தையா மனைவி சினேகாவுக்கு, சரத்(21) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த கணவன் முத்தையா, சினேகாவை கண்டித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, சினேகா, குழந்தையை எடுத்துக்கொண்டு கள்ளக்காதலன் சரத் உடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு, திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்துடன் நாமக்கல் வந்துள்ளனர். இவர்களை ஒன்றாக சேர்த்து வைக்க குடும்பத்தினர் மறுத்து விட்ட நிலையில் சினேகா தனது மகளுடன் பரமத்திவேலூரை அடுத்துள்ள சேலூர் செல்லப்பம்பாளையத்தில் உள்ள இவரது பெரியப்பா மகள் கோகிலா வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் தனது கள்ள காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதி, தனது பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்து உள்ளார். இவருடன் பெரியப்பா மகள் கோகிலாவும் இருந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சினேகா, கோகிலா இருவரையும் புடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் போலீசாரிடம் சினேகா கூறுயது, முறைப்படி விவாகரத்து பெற்று வந்தால், தன்னை திருமணம் செய்து கொள்வதாக சரத் கூறியதாகவும், தனது உறவுக்கு தனது குழந்தை தடையாக இருந்ததால், கிணற்றில் வீசி கொலை செய்ததாகவும் கூறினார்.
இதனையடுத்து குழந்தையை கொலை செய்த தாய் சினேகாவுக்கு உடந்தையாக இருந்த கோகிலா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, நேற்று பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிபதியின் உத்தரவில், இருவரும் சேலம் மத்திய பெண்கள் சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர். மேலும், கொலை செய்யப்பட்ட குழந்தையின் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தந்தை முத்தையா மற்றும் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
English Summary
Forgery The cruel mother who killed the child by throwing it in a well Police investigation