முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் அவரின் குடும்பத்தினர் மலர் அஞ்சலி.! - Seithipunal
Seithipunal


முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் அவரின் நினைவை போற்றி மரியாதையை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள அவரின் நினைவிடத்தில், அவரின் குடும்பத்தினரும், பொதுமக்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

மேலும், அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு, ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மைதானத்தில், 500 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து, சுமார் 5 மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி சாதனை செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former President Abdul Kalams family pays floral tributes at his memorial


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->