பார்முலா-4 கார் பந்தயம் சென்னையின் மதிப்பை உயர்த்தும்!...உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


நாளை முதல் பார்முலா-4 கார் பந்தயம் நடைபெறும் நிலையில், இது சென்னையின் மதிப்பை உயர்த்தும் என்று, நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நாளை முதல் செப்டம்பார் 1-ம் தேதி வரை பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகள் மிக தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று முதல் தீவுத்திடலை சுற்றி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, பெருநகர சென்னைப் போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையேயே சென்னையில் பார்முலா-4 கார் பந்தயத்தை நடத்த எந்த தடையும் இல்லை என்று, நேற்று சென்னை உயர்நீதிமன்றம்  தீர்ப்பளித்தது. இந்த நிலையில், பார்முலா-4 கார் பந்தயம் சென்னையின் மதிப்பை உயர்த்தும் என்று, நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' தள பக்கத்தில், இந்தியாவின் முதல் 'ஆன் ஸ்ட்ரீட் பார்முலா-4 சாம்பியன்ஷிப்' கார் பந்தயத்தை சென்னையில் நடத்துவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் என்றும், இந்த அற்புதமான முயற்சி சென்னையின் மதிப்பை உயர்த்தும் என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Formula 4 car racing will raise the profile of Chennai Actor Dhanush congratulates Udayanidhi Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->