அழகான ஆற்றங்கரை பகுதியில்.. வியப்பில் மக்கள்... மனதை கவரும் இடம்..!!
fort st david
பாண்டிச்சேரியிலிருந்து ஏறத்தாழ 25கி.மீ தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து ஏறத்தாழ 48கி.மீ தொலைவிலும், கடலூருக்கு மிக அருகிலும் அமைந்துள்ள அழகிய வரலாற்று சிறப்புமிக்க கோட்டை தான் புனித டேவிட் கோட்டை ஆகும்.
சிறப்புகள் :
இந்தியாவில் பிரித்தானியரின் முதலாவது கோட்டையாக திகழும் புனிதடேவிட் கோட்டை கடலூரின் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. இக்கோட்டை வரலாற்றுப் பொக்கிஷமாகவும், கலாச்சார அடையாளமாகவும் திகழ்கின்றன.
இந்தக் கோட்டை கெடிலம் என்ற ஆற்றங்கரை பகுதியில் அமைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மிகவும் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.

டேவிட் கோட்டையின் ஒரு வியப்பான அதிசயம் என்னவென்றால் ஒருவரால் கட்டப்பட்ட சிறிய கோட்டை இதுவாகும்.
கடல் மற்றும் ஆற்றங்கரை பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் பார்ப்பதற்கு இந்தக் கோட்டை அழகாக காட்சியளிக்கும். சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாகவும் இந்தக் கோட்டை விளங்குகின்றன.
பிறகு இங்கிருந்து சிறிது தூரம் சென்றால் சில்வர் பீச் என்ற கடற்கரை அமைந்துள்ளது. இங்கு குதிரையேற்றம் மற்றும் படகு சவாரிகளில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செல்லலாம். மேலும் நம் மனதை கவரும் வகையில் படகு கூடமும், பூங்காவும் இந்த கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளன.