திருவள்ளூர் அருகே 40 கிலோ கஞ்சா பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு அதிகளவில் இருக்கிறது. இதனைத் தடுக்க தமிழக அரசு சார்பிலும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. போலீசார் தமிழக எல்லைகளில் சோதனைச் சாவடி அமைத்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு – ஆந்திரா எல்லைப்பகுதியான திருவள்ளூர் மாவட்டம் கும்மிடி பூண்டி அருகே எளாவூர் சோதனைச்சாவடியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஆந்திராவில் இருந்து கார் ஒன்று வந்துள்ளது. அதனை தடுத்து நிறுத்திய போலீசார் சோதனை செய்ததில் கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சா போதைப்பொருள் இருப்பது தெரிய வந்தது.

இதனை பறிமுதல் செய்த போலீசார் காரில் கஞ்சா கடத்தி வந்த ஒடிஸாவை சேர்ந்த சந்தோஷ் நாய்க், கேரளாவை சேர்ந்த மித்தில்லா, கும்பகோணத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

forty kilo kanja seized in thiruvallur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->