சினிமா பாணியில் கொள்ளை - கையும் களவுமாக சிக்கிய மர்ம கும்பல்.! - Seithipunal
Seithipunal


சினிமா பாணியில் கொள்ளை - கையும் களவுமாக சிக்கிய மர்ம கும்பல்.!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏனாம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரசாக். இவர் சிங்கப்பூரில் இருந்து திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்களுக்கு தங்க நகைகளுடன் வரும் நபர்களிடம் நகைகளை பெற்று, அதனை கொண்டு சேர்க்கும் வேலையை செய்து வருகிறார்.

அந்த வகையில், அவர் கோவை விமான நிலையில் இருந்து கடந்த 3-ம் தேதி இரவு, பயணி ஒருவரிடமிருந்து 500 கிராம் எடைக் கொண்ட 6 தங்க செயின்களை வங்கிக் கொண்டு சென்னைக்கு செல்வதற்காக அவினாசி சாலையில் நடந்துச் சென்றார்.

அப்போது, காவல் உடையில் காரில் வந்த இரண்டு பேர் அப்துல் ரசாக்கை வழி மறித்து அவர் மீது சந்தேகம் உள்ளதாகவும், விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி ரசாக்கை வலுகட்டாயமாக காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். 

பின்னர் அவரிடமிருந்த 500 கிராம் தங்க செயின்களை பறித்துக் கொண்டு ஈரோடு மாவட்டம் பவானி அருகே இறக்கி விட்டு சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அப்துல் ரசாக் போலீஸில் புகார் அளித்தார். அதன் படி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இதைத்தொடர்ந்து, போலீசார் விமான நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதிகளிலும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திடமான நான்கு பேர் விடுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். 

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரன், குருதேவ், மகேந்திரன், திருமூர்த்தி என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் கொள்ளை திட்டத்திற்காக போலீஸ் வாகனத்தை தயார் செய்துக் கொண்டு, காவலர்கள் உடையை அணிந்து வந்ததும் விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples arrested for gold robbery in trichy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->