கோயம்பேடு : போக்குவரத்து ஊழியர்களிடம் தகராறு செய்த கும்பல் : நள்ளிரவில் போராட்டம்.! - Seithipunal
Seithipunal


நேற்று முன்தினம் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்லும் பேருந்துகள் நிற்கும் நடைமேடையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் செல்லும் அரசு பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது.

அந்த பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது மதுபோதையில் பேருந்தில் ஏறிய நான்கு பேர் நேரமாகிவிட்டது பேருந்தை உடனடியாக எடுங்கள் என்று கூறி இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அதற்கு ஓட்டுநர் பேருந்து புறப்படுவதற்கு இன்னும் நேரம் உள்ளது என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர்கள் நான்கு பெரும் அவர்களிடம் மீண்டும் கராறில் ஈடுபட்டனர்.

இந்த சத்தம் கேட்டு மற்ற பேருந்துகளில் உள்ள பேருந்து நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர்கள் அங்கு விரைந்து வந்து அந்த நான்கு பேரிடம் தகராறு குறித்து கேட்டனர். 

இதனால் கோபமடைந்த அவர்கள், அருணாச்சலம் என்ற நடத்துனரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேருந்து நிலையத்தில் இருந்த மற்ற பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பேருந்துகளை இயக்காமல் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தகராறு செய்த நான்கு பேரை கைது செய்யும் வரை அரசு பேருந்துகளை இயக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். பேருந்துகள் இயக்கப்படாததால் நள்ளிரவில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகள் மிகுந்த அச்சத்திலும், குழப்பத்திலும் இருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த   கோயம்பேடு உதவி போலீஸ் கமிஷனர் ரமேஷ்பாபு மற்றும் மதுரவாயல் தலைமை காவலர் ஆனந்த் உள்ளிட்டோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தினர். 

சுமார் இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின்னர், பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அதிகாலை 2 மணியளவில் பேருந்துகளை இயக்க தொடங்கினர். போக்குவரத்து ஊழியர்களிடம் தகராறு செய்ததால் கோயம்பேடு பேருந்து நிலையம் மிகுந்த பரப்பரப்புடன் இருந்தது.

இதையடுத்து, பேருந்து நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தை சேர்ந்த ஜாக்கி, பிரகாஷ், செல்வா, மணி, உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples attack govt bus driver and conductor in koyambedu bus stand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->