திண்டுக்கல்: புகையிலை பொருட்கள் கடத்திய 4 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல்லில் புகையிலை பொருட்கள் கடத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி காவல்துறையினர், காரமடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்பொழுது அந்த வழியாக, நம்பர் பிளேட் இல்லாமல் வந்த ஒரு கார் மற்றும் இருசக்கரனத்தை நிறுத்த முயன்ற போது அவர்கள் நிற்காமல் அதிவேகத்தில் சென்றுள்ளனர்.

இதையடுத்து அவர்களை விரட்டி பிடித்த காவல்துறையினர், அந்த வாகனங்களில் சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 210 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் காரில் இருந்த நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் சுக்காம்பட்டியை சேர்ந்த சூரிய பிரகாஷ், உலகம்பட்டி சேர்ந்த சேசுராஜ், என்.பஞ்சம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் வெயிலஞ்சான்பட்டியை சேர்ந்த நல்லாம்பாண்டி என்பதும், அவர்கள் புகையிலை பொருட்களை கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது.

இதையடுத்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து புகையிலை பொருட்கள் மற்றும் நம்பர் பிளேட் இல்லாத கார், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Four persons arrested smuggling Tobacco products in Dindigul


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->