தூத்துக்குடி வி.ஏ.ஓ கொலையில் குற்றவாளியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு.!
four special force appointed for thoothukudi vao murder case
தூத்துக்குடி வி.ஏ.ஓ கொலையில் குற்றவாளியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு.!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வல்லநாடு அடுத்த முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலாறாகி பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் நேற்று அலுவலகத்தில் பணியில் இருந்த போது மர்ம நபர்கள் உள்ளே புகுந்து லூர்தை சரமாரியாகத் தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த லூர்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், லூர்து மணல் கடத்தலை தடுத்ததற்காக மர்ம நபர்கள் கொலை செய்தது தெரிய வந்தது.
இந்த நிலையில், அகரம் பகுதியில் ஒரு வாலிபர் அரிவாளுடன் செல்வதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அந்த நபரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தியதில் அவர், கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்பதும், லூர்து பிரான்சிஸ் கொலையில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமசுப்பிரமணியனை கைது செய்தனர். பின்னர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மற்றவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
English Summary
four special force appointed for thoothukudi vao murder case