எனது தொகுதியில் இலவசமாக குடிநீர் வழங்க வேண்டும்..முதலமைச்சருக்கு MLA பிரகாஷ் குமார் கோரிக்கை!
Free drinking water should be provided in my constituency MLA Prakash Kumar appeals to CM
ஏன் எனது தொகுதியில் அமைந்துள்ள அனைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்களில் வழங்கப்படும் குடிநீர் இலவசமாக பொதுமக்களுக்கு ஏன் வழங்கக்கூடாது என முத்தியால்பேட்டை தொகுதி MLA பிரகாஷ் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்ட பேரவையில் முத்தியால்பேட்டை தொகுதி MLA பிரகாஷ் குமார் பேசியதாவது :கடந்த சனிக்கிழமை அதாவது 22/03/25 அன்று காலை 10 மணி முதல் முத்தியால்பேட்டை தொகுதி முழுவதும் உப்புத் தன்மை உடன் கூடிய குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறி பொதுமக்கள் அனைவரின் கவனத்தை ஈர்க்க ஒரு போராட்டத்தை பொய் ஒன்றையே கூறிவரும் முன்னாள் முதலமைச்சர் திரு நாராயணசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பொது மக்களுக்கு தவறான தகவல்களை பரப்பி வரும் முன்னாள் முதலமைச்சர் திரு நாராயணசாமி அவர்கள் தெரிந்துகொள்ள பல செய்திகள் உள்ளன.
கடந்த 2017 அக்டோபர் மாதம் உங்கள் காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து முத்தியால்பேட்டைதொகுதி முழுவதும் 6000 TDS அளவில் குடிநீர் தொகுதி முழுவதும் வினயோகம் செய்து வருவதாக கூறி உங்களை எதிர்த்து போராட்டம் பொதுமக்கள் நடத்தினார்கள்.
அதன் பிறகு 2021 வரை தாங்கள் ஆட்சியில் இருந்தீர்கள் என்ன செய்தீர்கள் சுத்தமான சுகாதாரமான குடிநீர் வழங்க ஏதேனும் நடவடிக்கை எடுத்து உண்டா.
மேலும் நாம் தேர்தலில் போட்டியிடும் பொழுது அதும் சுயேட்சை வேட்பாளராக பொதுமக்கள் என்னிடம் கேட்ட ஒரே கோரிக்கை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைப்பது மற்றும் உப்புத்தன்மை எவ்வளவு குறைத்து குடிநீர் வழங்க முடியுமோ அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று.
அதனை நமது மாண்புமிகு மக்கள் முதல்வரின் ஆதரவோடு சோலை நகர் பூங்காவில் ஒரு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையமும் மற்றும் சோலை நகர் நான்கு கான் அருகில் ஒரு குடிநீர் சுத்திகரிப்பு அமைத்து இன்று நடைமுறையில் உள்ளது.
மேலும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பூஜை போட்டு பாதியில் நின்ற விஸ்வநாதன் நகர் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை உடனடியாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுத்து கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறப்பு விழா செய்து முத்தியால்பேட்டை காந்தி வீதி மேற்கு புறம் உள்ள அனைத்து பகுதிக்கும் 500 TDS அளவுக்கு குறைவான உப்பு தன்மையுடன் கூடிய குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இதனை பொதுமக்கள் அனைவரும் அறிந்ததே அதுபோன்று வைத்தி குப்பம் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி திறப்பு விழாக்கண்டு அங்காளம்மன் நகர் வ.உ.சி நகர் போன்ற பகுதிக்கு சுத்தமான சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் திருவள்ளுவர் நகர் பகுதிக்கு மகளிர் கல்லூரி அருகில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி 750 TDS அளவு உள்ள குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இப்படி இருக்கையில் முன்னாள் முதலமைச்சர் திரு நாராயணசாமி அவர்கள் பொதுமக்கள் மத்தியில் ஒரு தவறான பொய்யான மக்களை திசைதிருப்பும் வகையில் உண்மைக்கு புறம்பான செய்தி அதாவது முத்தியால்பேட்டை முழுவதும் குடிநீர் உப்புத்தன்மை அளவு 2400 TDS உள்ளதாக தவறான தகவலை பத்திரிக்கையாளர் மத்தியில் கூறியுள்ளார் இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாக உள்ளது மேலும் ஏதோ குறை சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்து செய்தது போல அந்தப் போராட்டம் இருந்தது.
மேலும் விரைவில் திருவள்ளுவர் நகர் ஒரு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம் திருவள்ளுவர் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைந்துள்ள ரங்க விலாஸ் தோட்டம் பகுதியில் விரைவில் அமைய உள்ளது.
இந்த தருணத்தில் நான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்வது எல்லாம் என்னவென்றால் விரைவில் அரசு ஏழை எளிய மக்களுக்கு தினசரி 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏன் எனது தொகுதியில் அமைந்துள்ள அனைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்களில் வழங்கப்படும் குடிநீர் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கக்கூடாது.
பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் எனது கோரிக்கையை ஏற்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் புதியதாக ஒரு மேன்மையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் அமைப்பை உருவாக்கி காட்டாமணி குப்பம் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு வரவுள்ள குடிநீரை அங்கு சுத்திகரித்து காட்டாமணி குப்பம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு கொண்டு செல்ல உள்ளார்கள் இதன் மூலம் காட்டாமணி குப்பம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பயன்பெறும் அனைத்து பயனாளிகளுக்கும் விரைவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீட்டு குழாய்களுக்கு செல்லும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இதனை எல்லாம் தெரிந்து கொண்டு தாங்கள் போராட்டம் நடத்தியதால்தான் இதுபோன்ற சுத்தமான குடிநீர் கிடைக்கப்பெற்றது என்று தற்பெருமை செய்து கொள்ள இந்தப் போராட்டம் ஒரு பொய்யான போராட்டமாக அமைந்துள்ளது.
ஆகவே இதனை அரசு வன்மையாக கண்டித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் ஒரு தவறான செய்திக்காக போராட்டம் நடத்துபவர்களுக்கு காவல்துறை எந்த அடிப்படையில் அனுமதி அளித்தது அது போன்று ஏதோ திருவிழா நடைபெறுவது போன்ற அடிக்கடி சாலை ஓரங்களில் கொடிக்கம்பம் நட பொதுப்பணித்துறை எப்படி அனுமதி அளித்தது.
ஏன் இவற்றையெல்லாம் தடுக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை இது போன்ற நிகழ்வுகள் எனது தொகுதியில் அடிக்கடி நடைபெறுகிறது இதனை காவல்துறையும் பொதுப்பணி துறையும் பாராமுகம் கொண்டுள்ளது.
இனிவரும் காலங்களில் இது போன்ற நடை பெறாமல் அரசு சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என முத்தியால்பேட்டை தொகுதி MLA பிரகாஷ் குமார் பேசினார்.
English Summary
Free drinking water should be provided in my constituency MLA Prakash Kumar appeals to CM