எல்லை மீறிய கிண்டல் பேச்சு.. நண்பரை கொலை செய்த இரும்பு கடைகாரர்..! - Seithipunal
Seithipunal


உணவகத்தில் கிண்டல் செய்ததால் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், நல்லவடியை சேர்ந்தவர் முத்து. இவர் அந்த பகுதியில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இவர் அவரது நண்பர் செல்வகுமார் என்பவருடன் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது, இருவரும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

சம்பவதன்று, செல்வகுமார் மது அருந்திவிட்டு உணவகத்தில் பரோட்டா சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முத்து அவரிடம் உன் மனைவி பிரிந்து 10 ஆண்டுகள் ஆகிறது உனக்கு பரோட்டா தேவையா என கிண்டல் செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர் முத்துவை சரமாரியாக குத்தினார்.

இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை  மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் செல்வகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தபகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Friend Kills His Friend Thirunelveli


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->