காணாமல் போன வாலிபர் பிணமாக மீட்பு: நண்பர்கள் அளித்த வாக்குமூலத்தால் ஆடிப்போன போலீசார்!
friends hacked teenager death threw body well
திருவள்ளூர், மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மகன் அஜித் (வயது 25) இவர் கடந்த 16ஆம் தேதி இரவு நண்பர்களுடன் வெளியே சென்று பின்னர் வீடு திரும்பவில்லை.
இவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது தொடர்பாக பச்சையப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்தின் நண்பர்களான நாகராஜ், கார்த்திக் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
![](https://img.seithipunal.com/media/crime 0223.png)
அப்போது அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் அஜித்தை வெட்டி கொலை செய்து விட்டதாகவும் அவரது உடலை கிணற்றில் வீசி இருப்பதாகவும் நாகராஜ் மற்றும் கார்த்திக் இருவரும் வாக்குமூலம் அளித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் அழுகிய நிலையில் இருந்த அஜித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
![](https://img.seithipunal.com/media/crime 45545.png)
அஜித்தின் உடல் மீட்கப்படும்போது அவரது கைகள் மற்றும் கால்கள் அவர் அணிந்திருந்த ஆடைகளால் கட்டப்பட்டு இருந்தது. மேலும் விசாரணையில் அஜித் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த 16ஆம் தேதி இரவு மது அருந்தி கொண்டிருக்கும்போது ஏற்பட்ட தகராறில் வீட்டுக்கு சென்ற அஜித்தை மீண்டும் வரவழைத்து கொடூரமாக வெட்டி கொலை செய்து அவரது கைகள் மற்றும் கால்களை கட்டி கிணற்றில் வீசி சென்றிருப்பது தெரிய வந்தது.
கார்த்திக் மற்றும் அவரது நண்பர் மீது ஏற்கனவே 7 குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. நண்பர்கள் சேர்ந்து சக நண்பரை வெட்டி கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
friends hacked teenager death threw body well