நெல்லை! ரசாயனக் கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


நெல்லையில் ரசாயனக் கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நெல்லை கண்ணம்மன் கோவில் தெருவில் உள்ள பழைய கடைகளில் அதிகாரிகள் திடீர் என்று சோதனை நடத்தினர். இந்நிலையில் மொத்த விற்பனை செய்யும் பழ கடை ஒன்றில் ரசாயனக் கற்கள் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு 500 கிலோ அளவிலான மாம்பழங்கள் ரசாயனக் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்டு இருந்தது.

இதனை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் ரசாயனக் கற்கள் வைத்து பழங்கள் பழுக்க வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடர்ந்து பழ கடைகளில் சோதனை நடத்தப்படும் என்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fruits ripened with chemical stones


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->