#BigBreaking || நாளை முழு ஊரடங்கில் திடீர் திருப்பம்.! சற்றுமுன் தமிழக அரசு பிறப்பித்த அதிரடி அறிவிப்பு.!
FullLockdown
நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், "கொரோனா பரவலை தடுப்பதற்காக, அரசு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையில் ஏற்கனவே திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி உண்டு.
நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் திருமண அழைப்பு பத்திரிக்கைகளை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல் துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள்." என்று அந்த அறிவிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று மதியம் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் திங்கள்தோறும் நடைபெறும் குறைதீர் முகாம்கள் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது.
நாளை மறுநாள் முதல் அமல் சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டு இருக்க வேண்டும், பயணிகள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ், அடையாள அட்டைகளை காட்டினால் மட்டுமே பயணிச்சீட்டு வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.