சோதனைக்கு நன்றி.."கெட்ட எண்ணம் கொண்ட பிரச்சாரம் முடிவுக்கு வரும்".. ஜி ஸ்கொயர் நிறுவனம் அறிக்கை.!! - Seithipunal
Seithipunal


சென்னை தலைமையிடமாகக் கொண்டு தென்னிந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் பிரபல கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலகங்களில் இன்று காலை 6:30 மணி முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் "எங்களிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை பயன்படுத்துவதற்கு எதுவும் இல்லை என்று உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறோம்.

இன்று நடைபெற்ற வருமான வரி சோதனை முழுவதும் நாங்கள் அவர்களுக்கு ஒத்துழைத்தோம். எங்களுக்கு எதிரான கெட்ட எண்ணத்தில் மேற்கொள்ளப்படும் அவதூறுகளை இந்த சோதனை முடிவுக்கு கொண்டு வரும் என நம்புகிறோம். கடந்த சில மாதங்களாகவே பலதரப்பட்டவர்களின் ஆதாரம் இல்லாத பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் உத்தரவாதம் இல்லாத துன்புறுத்தல்கள் எங்கள் நிறுவனத்தின் மீது நடத்தப்பட்டு வருகிறது.

நம்ப முடியாத அளவு சவாலான காலமாக இருந்தாலும், இந்த குற்றச்சாட்டுகளின் அதிகாரப்பூர்வ தன்மையை மதிப்பீடு செய்யும் வகையிலான நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த குற்றச்சாட்டுகளின் மீது எந்த உண்மையும் இல்லை என்பதை இந்த வாய்ப்பை பயன்படுத்தி அழுத்தமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

ஒரு நிறுவனமாக நாங்கள் வெளிப்படைத்தன்மை இருப்பதை எங்கள் பங்குதாரருக்கு நேர்மையுடன் இருக்க வேண்டும் என்பதையும் நம்புகிறோம். எங்களிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை மற்றும் பயப்படுவதற்கும் எதுவும் இல்லை என்று உங்களிடம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த வருமான வரித்துறை சோதனை முழுவதும் அதிகாரிகளுக்கு முழுவதும் ஒத்துழைப்பு வழங்கினோம். இந்த மதிப்பீடு எங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் கெட்ட எண்ணம் கொண்ட பிரச்சனை பிரச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் என்று நம்புகிறோம். இந்த தூய்மையான நேரத்தில் எங்களுக்கு உறுதுணையாக நின்ற பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

G Square report thanks to Income Tax audit


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->