சென்னையில் போலீசார் நடத்திய கஞ்சா ஆபரேஷன் ! ஒரே வாரத்தில் 26 பேர் கைது! - Seithipunal
Seithipunal


சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போலீசாரின் கஞ்சா வேட்டையில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் போதை பொருள்களில் எண்ணிக்கையும் போதைப்பொருட்களை பயன்படுத்துவரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தொடர்ந்து போதை பொருள் கடத்தல் மற்றும்  போதை பொருள் விற்பனை போன்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து புதிய வகை போதைப் பொருட்கள் கப்பல் வழி மூலமாகவும், வான்வழி மூலமாகவும் கடத்தி வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது. அந்த வகையில் கஞ்சா பொட்டலங்கள் தொடர்ந்து கடத்தப்படுவதும் விற்பனை செய்வதும் தற்போது கஞ்சா சாக்லேட் போன்ற பொருட்கள் சென்னையில் அதிக இடங்களில் புழுக்கத்தில் இருந்து வருகிறது.


இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பெயரில் கஞ்சா போன்ற போதைப் பொருள்களை ஒழிப்பதற்காக நடவடிக்கைகளை போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கஞ்சா போன்ற போதைப் பொருள்களை கடத்தி வருபவர்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் போலீசார் நடத்திய கஞ்சா சோதனை வேட்டையில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 50 கிலோ கஞ்சா, 2,575 போதை மாத்திரைகள், 9 செல்போன், ரூ. 17 லட்சம் பணம், 5 மோட்டார் சைக்கிள், 1ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் கஞ்சா போன்ற போதை பொருட்கள் ஒழிப்பில் போலீஸ்சார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த வழக்குகளில் கைதாகும் நபர்களின் சொத்து மற்றும் வங்கி கணக்குகளையும் முடக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை 2,578 பேர் விபரங்கள் சேகரிக்கப்பட்டு இதில் 1,239 பேரின் வங்கி கணக்குகளில் போலீசார் முடக்கி உள்ளன. 

இந்த ஆண்டு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வழக்கில் கைதான 156 பேர் மீது கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் குண்டார் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ganja case 26 people arrested in one week


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->