திருவாரூர் அருகே.. மூடிய கிணற்றில் இருந்து கசியும் கேஸ்; மரண பீதியில் பொதுமக்கள்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் எண்ணெய் கிணறுகள் அமைந்திருந்தது. அதிலிருந்து எடுக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் வாயு தீர்ந்து போனதால் பல எண்ணெய் கிணறுகள் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் மூடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் காரிமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் அமைக்கப்பட்டிருந்த 2 எண்ணெய் கிணறுகளில் இருந்து 7 ஆண்டுகளுக்கு முன்பே ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து அந்த 2 எண்ணெய் கிணறுகளும் மூடப்பட்டன.

இந்த நிலையில் மூடப்பட்ட எண்ணெய் கிணற்றில் இருந்து தற்போது அதிக அளவில் வாயு வெளியேறி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மூடப்பட்ட கிணற்றிலிருந்து வெளியேறுவது ஹைட்ரோ கார்பனா? மீத்தேனா? அல்லது வேறு ஏதேனும் வாயுவா? என தெரியாமல் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் காரியமங்கலம் பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. 

மேலும் கேஸ் கசியும் 2 எண்ணெய் கிணற்றிலிருந்து 500 மீட்டர் இடைவெளியில் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளதால் ஓஎன்ஜிசி அதிகாரிகள் வாயு கசிவை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gas leaking from closed well near Thiruvarur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->