வீடு புகுந்து காதலிக்கு அரிவாள் வெட்டு...காதலன் வெறிச்செயல்! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே  பழகுவதை தவிர்த்ததால் வீடு புகுந்து காதலிக்கு அரிவாளால் காதலன் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த காதலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கற்குடி கிராமத்தை சேர்ந்தவர்  இசக்கிதுரை. இவரது மகன் திருமலைக்குமார், 22 வயதான இவருக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த  இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் பல்வேறு இடங்களில் இன்பமாக சுற்றிவந்து தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் இன்பமாக சுற்றிவந்து தங்கள் காதலை வளர்த்து வந்த இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக திருமலைக்குமாருடன் பழகுவதை அவரது காதலி தவிர்த்து வந்தார். இதனால் மனவேதனையில் இருந்த திருமலைக்குமார் தனது வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு, காதலி வீட்டிற்குள் புகுந்து  தகராறில் ஈடுபட்டு, தான் வைத்திருந்த அரிவாளால் காதலி தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

உடனடியாக  அக்கம்பக்கத்தினர் பலத்த காயம் அடைந்த அந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த சம்பவம் குறித்து புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய திருமலைக்குமாரை கைது செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Girlfriend stabbed to death at home Lover's rampage


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->