விற்பனையில் ஏற்படும் செலவை தமிழக அரசு ஏற்க முன்வர வேண்டும் - ஜி.கே.வாசன்.! - Seithipunal
Seithipunal


த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது:- "பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி பால் உற்பத்தியாளர்களுக்கு பயன் தர வேண்டும் என்பது எல்லாம் சரியானது தான்.

ஆனால், அதே சமயம் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களின் நலன் கருதி பால் விலையை உயர்த்தாமல் இருந்தால் தான் சாதாரண ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு பயன் தரும். 

இதையடுத்து, பால் கொள்முதல் விலையின் உயர்வால், ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தாமல், விற்பனையில் ஏற்படும் செலவை தமிழக அரசே ஏற்க முன்வர வேண்டும். அதாவது பாலின் கொள்முதல் விலையை ஈடுசெய்வதற்கு மாற்று வழியில் பொருளாதாரத்தை ஈட்ட முயற்சி செய்ய வேண்டுமே தவிர  அத்தியாவசிய தேவையாக இருக்கின்ற பால் விலையை உயர்த்தக்கூடாது.

இந்நிலையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்து விட்டு, இப்போது பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்படும் என்ற அறிவிப்பால் பொது மக்களுக்கு பொருளாதாரத்தில் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தப் பிறகு சொத்து வரி, மின் கட்டணம் உயர்வை அடுத்து, தற்போது பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது தான் தி.மு.க ஆட்சியின் செயல்பாடுகள். எனவே தமிழக அரசு ஆவின் பால் பாக்கெட் விலையை உடனடியாக திரும்ப பெறுவதற்கு முன்வர வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gk vaasan report for aavin milk price increase


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->