ஆவின் நிறுவன பொருள்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை தேவை! ஜி.கே. வாசன் கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


ஆவின் மூலம் விற்கப்படும் பால் உள்ளிட்ட பால் பொருட்கள் தட்டுப்பாடில்லாமல் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஜி.கே. வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பொது மக்களுக்கு ஆவின் பாலகம் மூலம் விற்கப்படும் பால் உள்ளிட்ட பால் பொருட்கள் குறைந்த விலையில் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க வேண்டும்.

மக்களின் அன்றாட அவசியத் தேவையான பால் மிகவும் முக்கியமான ஒன்று.

தமிழ்நாடு அரசு ஆவின் மூலம் பால், வெண்ணெய் விநியோகத்தை செயல்படுத்தி வருவது மக்களுக்கு பயனளிக்கிறது. 

ஆனால் கடந்த ஒரு வார காலமாக ஆவின் நிறுவனத்தைச் சார்ந்துள்ள சென்னை மற்றும் புறநகர் வாடிக்கையாளர்களுக்கு வெண்ணெய் கிடைப்பதில் தட்டுப்பாடு இருப்பதாக தெரிவிக்கின்றனர். 

அதே போல கொழுப்புச் சத்து நிறைந்த ஆரஞ்சு நிற பாக்கெட் பால் கிடைப்பதிலும் தட்டுப்பாடு உள்ளது.

பால் மற்றும் பால்பொருட்கள் இருப்பில் இருப்பதையும், விற்பனை செய்வதில் குறை ஏதும் இல்லாததையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மக்கள் வழக்கமாக வாங்கும் பால் பொருட்களின் தேவையை கணக்கில் கொண்டு முறையாக திட்டமிட்டு முன்கூட்டியே கொள்முதல் செய்ய வேண்டும்.

பால் பொருளான வெண்ணெய் தொடர்ந்து கிடைப்பதற்கு இருப்பில் இருக்க வேண்டும்.

ஆவினில் பால் உள்ளிட்ட பால் பொருட்களை குறைந்த விலையில் தட்டுப்பாடில்லாமல் வழக்கமாக வாங்கும் நுகர்வோர் அவ்வப்போது ஏமாற்றம் அடைவது குறையாக உள்ளது.

ஆவினில் பணிபுரியும் ஊழியர்கள் பால் பொருட்கள் இருப்பில் இல்லை என்று கூறும்போது அவர்களுக்கும், நுகர்வோருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

 இதனை சரிசெய்ய வேண்டியது ஆவின் நிறுவனம் என்றால் தமிழக அரசும் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு மக்களின் தேவைகளில் ஒன்றான பால் உள்ளிட்ட பால் பொருட்கள் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க வழிவகைச் செய்ய வேண்டும்.

மேலும் தமிழக அரசு, ஆவின் நிறுவனத்துக்கு பால் உள்ளிட்ட பால் பொருட்கள் தொடர்ந்து கிடைக்கவும், ஆவின் நிறுவன ஊழியர்கள் மற்றும் நுகர்வோர் நலன் காக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் கோரிக்கை வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GKVasan demands to reduce aavin milk


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->