சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்

மத்திய அரசு, சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதை தவிர்க்கும் விதமாக நடவடிக்கை எடுத்து பொது மக்கள் நலன் வேண்டும்.

நாளை ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசின் நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் மட்டுமல்ல அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள்.

நாடு முழுவதும் உள்ள தேவையற்ற சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது தான் பொதுவானது. 

குறிப்பாக தமிழக அரசு பரனூர், சூரப்பட்டு, சென்னை சமுத்திரம், நெமிலி, வானகரம் ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அகற்றுமாறு கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் மத்திய அரசின் நெடுஞ்சாலை ஆணையம் - சூரப்பட்டு மற்றும் வானகரம் ஆகிய இரண்டு சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அதிகரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது மாநிலம் முழுவதும் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது.

 சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்துவதால் சரக்கு வாகனங்களுக்கான போக்குவரத்துக்கு ஆகும் செலவும், பொது மக்களின் போக்குவரத்துக்கான கட்டணமும் அதிகரிக்கும். மேலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும். இதனால் சாதாரண மக்கள் தான் பெருமளவு பாதிக்கப்படுவார்கள்.

பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்பட்டு, சுங்கக்கட்டணமும் உயர்த்தப்பட்டால் வாகன உரிமையாளர்களுக்கும், பொது மக்களுக்கும் பொருளாதாரத்தில் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும்.

ஏற்கனவே கொரோனா காலப்பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வரும் வாகன உரிமையாளர்கள், பொது மக்கள் என அனைவரும் பொருளாதார ரீதியாக பாதித்துவிடாமல் இருக்க உதவி செய்யும் நோக்கில் சுங்கக்கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பது நாட்டு மக்களுக்கு நல்லது.

எனவே மத்திய அரசு, அனைத்து மாநில மக்களின் தற்போதைய பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு தேவையற்ற சுங்கச்சாவடிகளை அகற்றவும், சுங்கக்கட்டணம் உயர்த்தப்படாமல் இருக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று த.மா.கா சார்பில் கோரிக்கை வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GKVASAN statement on toll rate hike


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->