புதிய முயற்சிகளை மேற்கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும்! ஜி.கே.வாசன் யுகாதி வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


மக்கள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என ஜி.கே.வாசன் யுகாதி தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள யுகாதி பண்டிகை தின வாழ்த்துச் செய்தியில்,

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் புத்தாண்டு தினமான யுகாதி பண்டிகை மக்களிடையே மகிழ்ச்சியையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தும் பண்டிகையாக அமைகிறது.

தெலுங்கு காலண்டரின்படி, யுகாதி எனப்படும் தெலுங்கு புத்தாண்டு நாளை ஏப்ரல் 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

பொதுவாக ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் யுகாதி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மேலும், வட இந்திய மாநிலங்களில் வழக்கமாகக் கொண்டாடப்படும் சைத்ரா நவராத்திரியின் தொடக்கமாகவும் இப்பண்டிகை நாள் குறிக்கப்படுகிறது. 

ஒவ்வொரு வருடமும்  யுகாதி பண்டிகையை தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் ஏன் உலகெங்கும் உள்ள தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் உற்சாகமாக கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது.

மகாராஷ்டிர மக்கள் இதே நாளை ‘குடிபாட்வா’ எனவும், சிந்தி இன மக்கள் ‘சேதி சந்த்’ எனவும் கொண்டாடுகின்றனர்.

யுகத்தின் ஆரம்பம் இந்நாளில் தொடங்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

யுகாதி பண்டிகையை கொண்டாடும் மக்கள் இந்த நாளில் புதிய ஆடைகளை அணிவதும், தெய்வ வழிபாடு செய்வதும், பலவகை உணவுகளை சமைத்து, இறைவனுக்கு படைத்து வழிபடுவதும் வழக்கமானது.

இப்பண்டிகையின் போது ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதும், உணவு உபசரிப்பதும், பணியாளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவதும், இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதும் சிறப்புக்குரியது.

கொரோனா காலப்பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு புதுப்பொலிவுடன் முன்னேறுவதற்கு இப்பண்டிகை நல்வழி காட்டட்டும்.

வசந்த காலத்தின் பிறப்பாக அமையும் யுகாதி பண்டிகையை கொண்டாடும் மக்கள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றிபெற வேண்டும்.

யுகாதி பண்டிகையை கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரும் நல்ல உடல்நலத்துடன், குடும்பத்துடன், மகிழ்வுடன், நீடூடி வாழ இறைவன் துணை நிற்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் யுகாதி பண்டிகை நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GKVasan yugadhi wishes


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->