உடனே பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடுங்கள்!...சென்னையில் தயார் நிலையில் 18 மாநில பேரிடர் மீட்பு குழுக்கள்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதை யொட்டி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்  உள்ளிட்ட 4 மாவட்டங்களில்   அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை, மின்சாரம், நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாகம் மற்றும்  குடிநீர் கழிவுநீரகற்று துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் தமிழக அரசு முன்னேற்பாடுகளை செய்துள்ளது.

இந்த நிலையில், கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு படையில் 18 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு குழுவுக்கு 25 வீரர்கள் வீதம் 450 வீரர்கள் அனைத்து உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சென்னையில் ஏற்கனவே 3 பேரிடர் குழுக்கள் உள்ள நிலையில் நெல்லையில் நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 பேரிடர் மீட்பு குழு சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும்,  திருச்சியில் 3 குழு, கோவையில் 3 குழு, மேட்டுப்பாளையத்தில் 3 குழு சென்னைக்கு வருவதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள்,  இது மட்டுமல்லாமல் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை தலைமையகத்தில் 10 பேரிடர் குழுக்கள் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Go to a safe place immediately 18 state disaster response teams are ready in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->