தீபாவளி எதிரொலி - களைகட்டிய குந்தாரப்பள்ளி சந்தை.!
goats sale in krishnagiri gundarapalli market
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குந்தாரப்பள்ளி பகுதியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். அதன் படி, இந்த வாரத்துக்கான சந்தை நேற்று நடைபெற்றது.
பொதுவாகவே களைகட்டும் இந்த சந்தை தற்போது தீபாவளி பண்டிகை என்பதால் கூடுதல் களைகட்டியுள்ளது. அதிலும், குறிப்பாக சந்தையில் ஆடுகளின் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.
இந்த சந்தையில் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமல்லாமல் அருகே உள்ள மாவட்டங்களிருந்து வியாபாரிகள் வந்து செல்வார்கள். அதன் படி இந்த முறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் வியாபாரிகள் வந்துள்ளனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
ஒரு ஆடு குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை விற்பனை செய்யப்பட்டது.
ஒரு ஜோடி ரூ.30,000 முதல் ரூ35,000 வரை விற்பனை செய்யப்பட்டது. மதிய நிலவரப்படி சுமார் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்தும் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
English Summary
goats sale in krishnagiri gundarapalli market