நகை கடத்தல் வழக்கு.. பிக்பாஸ் பிரபலத்திடம் அமலாக்கத்துறையினர் விசாரணை..! - Seithipunal
Seithipunal


நகைக்கடத்தல் வழக்கில் நடிகை அக்சரா ரெட்டியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் நடிகையாக இருந்து வருபவர் அக்சரா ரெட்டி. சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் 5 ன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு கொச்சி நெடும்பாசேரி விமான நிலையத்தில் 20 கிலோ தங்கம் கடத்தியதாக பாயிஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதனை அடுத்து, அவரிடம் நெருக்கமாக இருந்த  பலரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, அக்சரா ரெட்டி நேற்று காலையில் கோழிக்கோடு அமலாக்க இயக்குனரகத்திற்கு விசாரணைக்காக வரவழைக்கப்பட்டார். 

அங்கு அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கம் கடத்தலில் பாயிசுடனான தொடர்பு குறித்து விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gold smuggling ED investigation Actor Akshara


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->