திடீர் சோதனை! திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய ரூ.1.53 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!
Gold worth Rs 1 crore seized at Trichy Airport
திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.53 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் சமீபநாட்களாக தங்கம் கடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் இருந்து பலரும் தங்கத்தை குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டு வந்து இந்தியாவில் அதிக விலைக்கு விற்று லாபம் பெறலாம் என்ற ஆசையில் தங்கத்தை கடத்தி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் பல கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் சிக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்தது பல்வேறு வழிகளில் வெளிநாடுகளில் இருந்தது தங்கம்,ஆமைகள், போதைப்பொருள்கள் உள்ளிட்டவை கடத்திவருவது தொடர்ந்தது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா விமானம் வந்தது. அந்த விமானத்தில் பயணித்து பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகக்கும் வகையில் இருந்த பயணி ஒருவரின் உடமையை சோதனை செய்து பார்த்தபோது அந்த பயணி 24 மற்றும் 22 கேரட் தரத்திலான செயின், பிரேஸ்லெட், வளையல், மோதிரம் என 2 கிலோ 291 கிராம் தங்கம் கடத்தி வந்தது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.1.53 கோடி என்று கூறப்படுகிறது. பின்னர் அந்த பயணியை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நகை யாருக்காக கடத்தி வரப்பட்டது? இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்ற கோணத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Gold worth Rs 1 crore seized at Trichy Airport