வந்தே பாரத் ரயில் : சாம்பாரில் தலை, கால்களுடன் வண்டு!...ரூ.50000 அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


நெல்லை-சென்னை இடையே தினமும் காலை 6 மணிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.  இந்த ரயிலில் பயணிகளின் வசதிக்கு எதுவாக உணவு வசதியும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியை சேர்ந்த சுடலைக்கண்ணு ஆகிய இரண்டு பேர் திருச்சி செல்வதற்காக வந்தே பாரத் ரயிலில் நேற்று காலை பயணம் செய்துள்ளனர்.

அப்போது இவர்களுக்கு இட்லி, வடை, சாம்பார் வழங்கப்பட்ட நிலையில், சாம்பாரில் சிறிய அளவில் 3 வண்டுகள் இருப்பதை பயணி முருகன் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து இவர் ரயிலில் இருந்த ரயில்வே அதிகாரிகளிடம் புகார் செய்த நிலையில், அது வண்டு இல்லை என்றும், அது சீரகம் என்று கூறியுள்ளனர்.

சீரகம் மசாலாவில் தலை மற்றும் கால்கள் இருக்குமா என்று அதிகாரியிடம் பயணிகள் கேள்வி கேட்டு பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சக பயணிகள் இதனை வீடியோவாக பதிவு செய்த நிலையில்,இது தொடர்பான
வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், ரயிலில் உணவு விநியோகம் செய்த பிருந்தாவன் புட் புராடக்ட்ஸ் நிறுவனத்திற்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும்,  சம்பந்தப்பட்ட பயணியிடம் மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vande bharat train beetle with head and legs in sambar action by imposing a fine of rupees 50000


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->