மகாராஷ்டிரா அரசு மீது சித்தராமையா வழக்கு!...சமூக வலைத்தளத்தில் பரபரப்பு அறிவிப்ப!
Siddaramaiah case against the maharashtra government
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடப்பு மாதம் 20-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று, தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து, அங்கு அரசியல் கட்சியினரிடையே தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.
அங்கு ஆளும் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகளின் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவ சேனா (உத்தவ் தாக்கரே), தேசிய வாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இதற்கிடையே, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கர்நாடக எல்லையில் உள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், சித்தராமையா வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி விட்டதாக மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க கூட்டணி அரசு, சட்டசபை தேர்தலுக்காக பொய் விளம்பரம் செய்துள்ளதாகவும், இதற்காக மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க அரசு மீது வழக்கு தொடரப்படும் என்று கூறியுள்ள அவர், அவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும் என்று கூறியுள்ளார்.
English Summary
Siddaramaiah case against the maharashtra government