வெளியான குட் நியூஸ்! இலவச பேருந்து பயணம்! 21-ந்தேதி முதல் டோக்கன்! முழுவிவரம்!
Good news released Free bus ride 21st Token
சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தால் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 21-ந்தேதி முதல் இத்திட்டத்திற்கான பயண டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதாக மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார்.
6 மாத காலத்திற்கான பயண டோக்கன்கள் வழங்கப்படும், அதாவது 2024 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை மூத்த குடிமக்கள் இந்த டோக்கன்களை பயன்படுத்தி இலவசமாக பயணிக்க முடியும். ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சேவையை பெற விரும்பும் மூத்த குடிமக்கள், தங்களது
- இருப்பிட சான்று (குடும்ப அட்டை),
- வயது சான்று (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை),
- 2 வண்ண புகைப்படங்கள்
சமர்ப்பிக்க வேண்டும்.
இத்திட்டம் மூத்த குடிமக்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
English Summary
Good news released Free bus ride 21st Token