திடீரென தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து - காரைக்குடியில் பரபரப்பு.!
government bus accident in karaikudi
திருச்சியில் இருந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி நோக்கி நேற்று மாலை 5 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று வந்தது. காரைக்குடி வருமானவரித்துறை அலுவலகம் அருகே வரும்போது அரசு பேருந்தில் திடீரென பிரேக் செயல்படவில்லை.

இதையடுத்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்த முயன்றார். ஆனால் பலனில்லை. தொடர்ந்து தாறுமாறாக சென்ற அரசு பேருந்தை சாலை தடுப்பின் மீது மோதி நிறுத்த முயன்றுள்ளார். ஆனாலும் பேருந்து அங்கிருந்து 500 மீட்டர் தூரம் கல்லூரி சாலையில் ஓடிச் சென்று நின்றது.
ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
government bus accident in karaikudi