ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வயலில் பாய்ந்த அரசு பேருந்து - பயணிகளின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக சாணாபுத்தூர் செல்லும் அரசு பேருந்து இன்று காலை வழக்கம் போல் இயக்கப்பட்டது. இந்தப் பேருந்தை ஓட்டுநர் வீரய்யன் இயக்கியுள்ளார். 

இந்த நிலையில், இன்று காலையில் இருந்தே மழை பெய்து கொண்டு இருந்ததால் இரண்டு பயணிகள் மட்டும் பேருந்தில் பயணம் செய்தனர். அதன் படி இந்தப் பேருந்து பொன்னேரி அடுத்த காட்டாவூர் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவதற்காக ஓட்டுநர் வீரய்யன் பெருந்தாய் திருப்பினார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோரம் உள்ள வயலில் பாய்ந்து கவிழந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒரு பயணிக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. ஓட்டுநர் நடத்துனர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government bus accident in thiruvallur ponneri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->