ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - அரசு கல்லூரி பேராசிரியர் கைது
Government College professor arrested for sexually harassing a young woman in a running train salem
சேலம் அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு கல்லூரி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் நேற்று முன்தினம் ராமநாதபுரம்-ஹூப்ளி வாராந்திர எக்ஸ்ப்ரஸ் ரயிலில் தந்தையுடன் ஓசூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சேலம் அருகே ரயில் வந்தபோது, இளம் பெண்ணின் இருக்கைக்கு மேல் படுத்திருந்த 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இளம்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்து இளம்பெண் சத்தம் போடவே சக பயணிகள், அவரைப் பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் விசாரணை செய்ததில், இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் சேலம் அரசு கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் சையது இப்ராஹிம்(57) என்பது தெரிய வந்தது.
இதைதாடுத்து சையது இப்ராஹிமை கைது செய்த போலீசார் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
English Summary
Government College professor arrested for sexually harassing a young woman in a running train salem