#BREAKING | மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!
Government schools Superstition Police case file Mahavishnu
மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அரசுப் பள்ளியில் பிற்போக்குத்தனமாக பேசிய மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில், மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்டத்தின் கீழ் நான்கு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கும், பின்னணியும்:
பரம்பொருள் பவுண்டேஷன் என்கிற அமைப்பைச் சேர்ந்த மகா விஷ்ணு என்கிற சொற்பொழிவாளர், சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு மூட நம்பிக்கையை ஊக்கப்படுத்தும் வகையில் உரையாற்றினார்.
குறிப்பாக மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.
இதற்க்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. மேலும், சைதாப்பேட்டை, திருவொற்றியூர் காவல் நிலையம் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த மகா விஷ்ணுவை, விமான நிலையத்திலிருந்து ரகசிய இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
Government schools Superstition Police case file Mahavishnu