ஆளுநர் - முதல்வர் இன்று சந்திப்பு! எதற்காக தெரியுமா? - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று சந்திக்க உள்ளார். 

இன்று மாலை ஆளுநர் ஆர்.என். ரவியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார். மாலை 5.30 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அண்மையில் உச்ச நீதிமன்றம் ஆளுநர் மு.க ஸ்டாலினை அழைத்து நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்கள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில் இன்று மாலை சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனின் தமிழக முதல்வர் ஆளுநரை சந்திக்க இருக்கலாம். இந்த சந்திப்பில் பல்வேறு முக்கியத்துவம் குறித்து பேச வாய்ப்புள்ளது. 

குறிப்பாக நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்கள் தொடர்பாக பேசலாம். தமிழக முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே சில கருத்து மோதல்கள் இருந்தாலும் உச்ச நீதிமன்றம் உத்தரவின் பேரில் ஆளுநர் முதல்வரை சந்திக்க அழைத்துள்ளார். 

மேலும் ஆளுநர் தரப்பில் நிறைவேற்றப்படாத சட்ட மசோதாக்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

முதலமைச்சர், ஆளுநர் சந்திப்பு முடிந்த பிறகு ஆளுநர் மாளிகைக்கு வெளியில் செய்தியாளர்களை சந்தித்து இருவரிடையே நடந்த உரையாடல் குறித்து தகவல் தெரிவிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்ட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor Chief Minister meeting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->