சட்டசபையில் உரையாற்றாமல் சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி.!
governor rn ravi avoide assembly meeting
தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது. இது அனைத்து மாநிலங்களிலும் உள்ள நடைமுறை ஆகும். இந்த நிலையில், இன்று கூடும் சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த இருந்தார்.
இதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி சற்றுமுன் சட்டசபைக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அவரை சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதையடுத்து கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாட வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. இதற்கு அதிருப்தி தெரிவித்து கூட்டம் தொடங்கிய மூன்று நிமிடத்தில் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார்.
சட்டசபைத் தொடங்கிய முதல் கூட்டத்தில் உரையாற்றாமல் சட்டசபை கூட்டத்தொடரை ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
governor rn ravi avoide assembly meeting