தமிழகத்தில் வேலை செய்யும் அளவிற்கு பட்டதாரிகளுக்கு திறன் இல்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு.!!
Governor RN ravi speech Graduates are not skilled enough to work in Tamil Nadu
தமிழகத்தில் வேலை செய்யும் அளவிற்கு பட்டதாரிகளுக்கு திறன் இல்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு.!!
சென்னையில் உள்ள குருநானக் கல்லூரியில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசியதாவது:- "தொழில் நிறுவன விரிவாக்கம் தொடர்பாக கேட்டபோது தொழிலதிபர்கள் அதிர்ச்சி தரும் பதிலை தெரிவிக்கிறார்கள்.
அதாவது, இந்தியாவில் பல லட்சம் மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்தும் வேலை இல்லாமல் இருக்கின்றனர். அவர்களை பணியமர்த்தும் போது தொழில் நிறுவனங்கள் பட்டப்படிப்பை விட தனித்திறனையே விரும்புகின்றன. அதேபோல், பொறியியல் படித்த 80% - 90% மாணவர்களுக்கு வேலை வழங்க முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
அவர்களிடம் இருந்து தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியமர்த்தும் அளவுக்கு பட்டதாரிகளுக்கு திறன் இல்லை என்ற பதில் தான் வருகிறது. பட்டப்படிப்பில் வரலாறு படிப்பவர்களுக்கும் அறிவியல் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். இளங்கலை பட்டம் முடித்த 70% பேருக்கும் வேலை கிடைப்பதில் சிரமம் உள்ளது.
ஆகவே தேசிய கல்விக்கொள்கை என்பது ஒரு புரட்சிகரமான கல்விக்கொள்கை ஆகும். இதன் மூலமாக ஏராளமான பட்டதாரிகளை உருவாக்க முடியும். இந்த கல்விக்கொள்கை மக்களால் உருவாக்கப்பட்டது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
Governor RN ravi speech Graduates are not skilled enough to work in Tamil Nadu