தெய்வானை யானை தாக்கி உயிரிழந்த பாகன் மனைவிக்கு அரசு வேலை..!
govt job to died deivanai elephant attack people wife
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் கடந்த 18-ந் தேதி தெய்வானை யானை தாக்கியதில் யானை பாகன் உதய குமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து யானை பாகன் உதயகுமார் வீட்டிற்கு சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உதயகுமார் மனைவி ரம்யாவிடம், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம், கோவில் நிதியிலிருந்து ரூ. 5 லட்சம், தக்கார் அருள் முருகன் சார்பில் ரூ.3 லட்சம் என்று மொத்தம் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
மேலும், யானை பாகன் உதயகுமார் மனைவிக்கு தகுதிக்கு தகுந்த வேலை வாய்ப்பு வழங்கப்படும். அவரது குழந்தைகள் படிப்புச் செலவை இந்த தொகுதி அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், கனிமொழி எம்.பி. ஆகியோர் ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், உயிரிழந்த பாகனின் மனைவிக்கு கோயில் அலுவலக உதவியாளர் பணிக்கான நியமன ஆணையை திமுக எம்.பி. கனிமொழி இன்று வழங்கி உள்ளார்.
English Summary
govt job to died deivanai elephant attack people wife