இனி இந்த இடத்திலையும் அரசு பேருந்துகள் நிற்காது- அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்துத்துறை அமைச்சர்.!
GovtBus MinisterRajaKannappan
சென்னை அருகே மாமண்டூர் உணவகங்களில் தமிழக அரசு பேருந்துகள் நிற்பதற்கு தடை வித்து உத்தரவிட்ட நிலையில், விக்கிரவாண்டி அருகே தரமில்லாத உணவு மற்றும் கூடுதல் விலைக்கு விற்ற 5 தனியார் உணவகங்களில் அரசு பேருந்துகள் நிற்க தடை போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூர் பயண வழி உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்வது வழக்கம். இங்கு தரமற்ற உணவு வழங்கி வழங்கிய உணவகங்கள் செயல்பட்டு வருவதால், தமிழக அரசு பேருந்துகள் அங்கு நின்று செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய தரமான உணவகத்திற்கு அனுமதி வழங்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உணவின் தரம் குறைவாக இருந்ததாகவும், விலைகள் அதிகமாக இருப்பதாகவும் பல்வேறு பயணிகளிடம் இருந்தும், பொதுமக்களிடமிருந்தும் புகார்கள் வந்து உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விக்கிரவாண்டி அருகே தரமில்லாத உணவு மற்றும் கூடுதல் விலைக்கு விற்ற 5 தனியார் உணவகங்களில் அரசு பேருந்துகள் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.
முதல்வரின் வழிகாட்டுதலின்படி போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
English Summary
GovtBus MinisterRajaKannappan