கால கொடுமை! கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை பார்ட் டைம் வேலை! பட்டதாரி பெண் கைது! - Seithipunal
Seithipunal


கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்த பட்டதாரி பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோவை சுந்தராபுரம் போலீசார் சத்தியமூர்த்தி நகர் பகுதிகளில் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சந்தேகம் படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் மற்றும் இளம் பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவர்கள் கையில் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர் அதில் கஞ்சா வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணையில் அவர்கள் கோவை சுந்தராபுரம் பகுதியில் சேர்ந்த சிஜி, சிட்கோ சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த ஷர்மிளா என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா போதை மாதிரிகளை விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இரண்டு பேரையும் காவல்துறை கைது செய்து அவர்களிடம் இருந்து 150 கிராம் கஞ்சியா மற்றும் 500 வலி நிவாரணி மாத்திரைகள் ஆகியவற்றை போலீசார் பரிந்துரை செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் ஷர்மிலா பிகாம் படித்துவிட்டு சிஏ படித்து வருவதுடன் ஆடிட்டர் பயிற்சி பெற்று வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு இடையே டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை விற்றாக கோவை மண்டலத்தில் உள்ள 13 மருந்து கடைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Graduate girl arrested for selling ganja and drugs


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->