மதுரையில் தண்ணீர் லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் தண்ணீர் லாரி மோதியதில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் வெயிலா (65). இவர் நேற்று பொருட்கள் வாங்குவதற்காக மளிகை கடைக்கு சென்றுள்ளார்.

அப்பொழுது எதிர்பாராதவிதமாக மூதாட்டி மீது தண்ணீர் லாரி மோதி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த மூதாட்டியை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மூதாட்டி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டி மீது மோதிய தண்ணீர் லாரி ஓட்டுனரிடம் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Grandmother killed in water truck collision in Madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->