ஒரு லட்சம் ரூபாய் பரிசு! சிசிடிவி கேமரா காட்சி, ஹேக்கர்களுக்கு அதிரடி போட்டி - சென்னை காவல்துறை அறிவிப்பு!
GREATER CHENNAI POLICE PRESENTS CYBER HACKATHON TOPIC CCTV FOOTAGE ANALYTICS
கண்காணிப்பு கேமராவில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் ஹேக்கர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று, சென்னை காவல்துறை போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.
சென்னை பெருநகர் காவல்துறை சார்பில், தற்போது நடக்கும் நவீன குற்ற செயல்களை தடுக்கும் விதமாக தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது.
இதில் முக்கிய பங்கு செலுத்தி வருவது சிசிடிவி கேமராக்கள் தான். இருந்தபோதியிலும் இந்த சிசிடிவி கேமரா காட்சிகளில் கூட ஒரு சில குறைபாடுகள் உள்ளது.
இதை கலையும் பொருட்டு தனியார் ஹேக்கர்களின் உதவியை தற்போது சென்னை காவல்துறை நாடி உள்ளது. மேலும் இதற்காக ஒரு போட்டி ஒன்றை, டிசம்பர் மூன்றாம் தேதி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடத்த உள்ளது.
சிசிடிவி பதிவாகும் குற்றவாளிகளின் முகத்தை தெளிவாக மாற்றும் வகையில், இரவு நேரத்தில் பதிவாகும் சிசிடி காட்சிகள் தெளிவாக மாற்றிக் கொடுக்கும் வகையில் இந்த போட்டி அமைய உள்ளதாக தெரிகிறது.
போட்டியில் மூன்று பேர் கொண்ட குழுவாக பங்கு பெறலாம். மொத்தம் எட்டு தலைப்புகளில் இந்த போட்டி நடைபெற உள்ளது. மேலும் தகவல்களுக்கு சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள போட்டிக்கான அறிவிப்பை பார்க்கவும்:
English Summary
GREATER CHENNAI POLICE PRESENTS CYBER HACKATHON TOPIC CCTV FOOTAGE ANALYTICS