குரூப் 4 தேர்வு - 6,244 பணியிடங்கள்,20 லட்சம் தேர்வர்கள்! Invalid மதிப்பெண் அறிமுகம்!!
Group 4 Examination Introduction of Invalid Marks
குரூப் 4 தேர்வு என்று நடைபெற்று வரும் நிலையில், இந்த தேர்வினை 20 லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் குரூப்-4 தேர்வில் முதல் முறையாக இன்வேலிட்டு மதிப்பெண் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6, 244 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வினை அறிவித்தது. 6,244 காலி பணியிடங்களுக்கு 20,37,101 விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் 38 மையங்களில் 7247 தேர்வு வகுப்பு அறைகளில் நடைபெற்று வருகிறது குரூப் 4 தேர்வு. இன்று காலை 9:30 மணி முதல் மதியம் 12.30 வரை 3 மணி நேரம் நடைபெறும். தேர்வுக்கு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே தேர்வு கூட்டத்துக்கு சென்று விட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இந்தாண்டு நடைபெறும் குரூப் 4 தேர்வில் முதல் முறையாக இன்வேலிட் மதிப்பெண் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கேள்விக்கு தவறான பதிலை முதலில் தேர்வு, செய்து அதை அடித்து விட்டு பின் அதே கேள்விக்கு வேறொரு பதிலை தேர்வு செய்தால், அதற்கான மதிப்பெண் கணக்கிடப்படாது என்று அரசு பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
English Summary
Group 4 Examination Introduction of Invalid Marks