தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த 5 பேர் கைது.!
Gutkha sellers arrest in kovai
கோவையில் குட்கா விற்பனை செய்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழக முழுவதும் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து போலீசார் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் இணைந்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து ஸ்டோர் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டதில், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாதாரம், தீபாராம் ஆகியோர் மூலம் இப்பகுதிக்கு குட்கா கொண்டுவரப்படுவதாக தெரிவித்தார்.
இதையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களுக்கு துணையாக செயல்பட்ட பிரகாஷ் குமார், ரஞ்சித் குமார் மற்றும் சோகரம் ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த 354 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இவற்றின் மதிப்பு ரூபாய் 3 லட்சத்து 54 ஆயிரமாகும்.
English Summary
Gutkha sellers arrest in kovai