வைரமுத்துவை விளாசும் ஹெச். ராஜா - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து, ‘’பேசியே வளர்ந்த திராவிட இயக்கங்களில் இன்றைக்கு பேசவே ஆள் இல்லாத நிலை உள்ளது. 

பெரியாரையும், அம்பேத்கரையும் நவீனயுகத்திற்கு மாற்ற வேண்டும். நல்ல சிந்தனைகள் மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்களில் எண்ணிக்கை குறைந்துள்ளது.

பெண்கள் இல்லையென்றால் ஆண்களுக்கு ஆறுதலே கிடைத்திருக்காது. ஆனால், பெண்களே இல்லையென்றால் ஆண்களுக்கு ஆறுதலே தேவை இருக்காது’’ என்று பேசியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ‘’முதலில் பாடகி சின்மயி, "வைரமுத்து திராவிட போராளி என்ற போர்வையில் ஒளிந்துக் கொண்டிருக்கிறார்" என்று குற்றம் சாட்டியுள்ளார். 

இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், சின்மயி அவர்களின் குற்றச்சாட்டின் அடிப்படையில் மகளிர் ஆணையம் இவருக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும்’’ என்று  பதிவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

H raja post against vairamuththu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->