பெரியாருக்கு பொங்கியவர்கள், முருகனுக்கு....? எச்.ராஜா சரமாரி பாய்ச்சல்..!! - Seithipunal
Seithipunal


கடவுள் நம்பிக்கையாளர்களுக்கும், மறுப்பாளர்களுக்கும் இடையே சமீபகாலமாக சமூக வலை தளங்களில் பல்வேறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு வருகின்றன. கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில், கந்தசஷ்டிகவசம் குறித்து அவதூறாகப் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதுகுறித்து, இந்து அமைப்புகள் பல அந்த யூடியூப் சேனல் மீது, வழக்கு தொடுத்தது. எனவே, அந்த யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், கோவை பகுதியில் இருக்கும் பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயத்தை பூசி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் கோவையில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இன்று அங்குள்ள 3 கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு சூழல் நிலவி வருகிறது. பெரியார் சிலை அவமதிப்பு சம்பவத்திற்கு பல்வேறு குரல்கள் எழுந்து வருகிறது. 

இந்நிலையில், பாஜக எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் முருகனை ஆபாசமாக வசைபாடிய நபர்களை எச்சரிக்க விருப்பம் இல்லாதவர்கள், பெரியாருக்கு பொங்கிக்கொண்டு வருகின்றனர் என்று பல அதிரடி ட்விட்களை பதிவு செய்து வருகிறார். இது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

H Raja Twit about Murugan Issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->