மகிழ்ச்சி! 72-வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்; கலைஞர், அண்ணா நினைவிடங்களில் மரியாதை!!!
Happy Chief Minister MK Stalin celebrates his 72nd birthday kalaingar and Anna homage at memorials
தமிழக முதலமைச்சரும், திமுக கட்சி தலைவருமான மு. க.ஸ்டாலின் இன்று தனது 72 வது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார். இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், 2025-26 ஆண்டிற்கான கல்வி மாணவர் சேர்க்கையைச் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு பள்ளியில் புதிதாகச் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்:
இதைத்தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் மற்றும் அண்ணா நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதைச் செலுத்தினார். இதில் முதலமைச்சருடன் துணை முதலமைச்சர், எம்.பி.டி.ஆர். பாலு, அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் சேகர் பாபு ஆகியோர் உடனிருந்தனர். இதில் இந்தி திணைப்பை எதிர்ப்போம்! எனக் கல்லறை முன்பு உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை வெப்பேரியில் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதைச் செலுத்தினார். மேலும் இணையதளத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பலர் ஹாஸ்டேக் போட்டு தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Happy Chief Minister MK Stalin celebrates his 72nd birthday kalaingar and Anna homage at memorials