20 ஆண்டுகளாக சீமான் பேச்சை கேட்க வில்லையா? - கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்
Havent you listened Seeman 20 years High Court
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக, நீதித்துறையை அவமிதிக்கும் விதமாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு மீதான விசாரணை இன்று நீதிபதி முன்னிலையில் வந்தது. அப்போது நீதிபதிகள் இதுகுறித்து ஆராய்ந்து கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையின்போது, "சீமான் பேச்சுகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதாக இருந்தால் இதுவரை 100 வழக்குகளாவது தாக்கல் செய்திருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, கடந்த 20 ஆண்டுகளாக சீமான் பேச்சை கேட்கவில்லையா? இப்போதுதான் முதன்முறையாக கேட்கிறீர்களா?" என்று சீமான் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுதாரருக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
இந்நிலையில், நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசிய வழக்கில் வீடியோ ஆதாரங்களை பார்த்துவிட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்த முழு விசாரணையை ஒத்திவைத்ததாக தெரிகிறது.
English Summary
Havent you listened Seeman 20 years High Court